திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் மீனாட்சி சுந்தரம் ( 47 )என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார் . இந்த நிலையில் கார்த்திக் என்பவர் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டார். அப்போது தனது நண்பர் ஒருவருடன் வருவதாக கூறியிருந்தார். ஆனால் கார்த்திக் மேலும் 5 பேருடன் ரூமில் தங்கி உள்ளார். அதைத்தொடர்ந்து ஓட்டல் வரவேற்பாளர் கார்த்திக்கிடம் ஆறு பேர் தங்க முடியாது .நீங்கள் உடனடியாக அறையை காலி செய்ய வேண்டும் என கூறியுள்ளார் . இதனால் அவருக்கும் கார்த்திக் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் ஆறு பேர் கும்பல் சேர்ந்து கம்ப்யூட்டர், மேஜை நாற்காலி ஆகியவற்றை அடித்து நொறுக்கிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து மீனாட்சி சுந்தரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் ஓட்டலை அடித்து நொறுக்கிய 6 பேர் மீது வழக்கு…
- by Authour
