திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு அடையாளஞ்சான் பகுதியைச் சேர்ந்த 69 வயதான முதியவர் செந்தில் குமார். இவர் நேற்று மதியம் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே சாலையை கடக்க முற்பட்டபோது மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் நோக்கி சென்ற பேருந்து அதிவேகமாக வந்து வளைவில் திரும்பி மோதியது. இதில் தலை மற்றும் தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே நிலை தடுமாறி சுயநினைவு இன்றி விழுந்தார்..
உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கன்டோன்மெண்ட் போக்குவரத்து போலீசார் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து பேருந்தை காவல் நிலையத்தில் பிடித்து வைத்துள்ளனர்..
மேலும் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது மேலும் அந்த பேருந்து அதிவேகத்தில் வந்து இந்த முதியவர் மீது மோதியது பதிவாகியுள்ளது..
நகர் பகுதிகளில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதன் மூலம் இது போன்ற பல விபத்துக்களை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரின் கோரிக்கையாக உள்ளது..