Skip to content

திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து

நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், எம்.ஆர்.எஃப், டி.வி.எஸ். ரிலையன்ஸ் ரீட்டைல், விஜய் மில்க், ஏ.பி.டி.மாருதி, அண்ணாமலை ஆட்டோ, ஆனந்த்

இன்ஜினியரிங் நிறுவனம் உள்ளிட்ட 181 தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை நேர்காணல் செய்து பணிக்கு தேர்வு செய்தனர்.

இம்முகாமில், படித்த, வேலை வாய்ப்பற்ற 1,997 ஆண்கள், 2988 பெண்கள் மற்றும் 41 மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 4,985 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 181 தனியார்த்துறை நிறுவனங்கள் (7 திறன் பயிற்றுநர்கள் உட்பட) கலந்து கொண்டு நேர் காணல் நடத்தினர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் இலவச திறன் பயிற்சிக்கு 43 நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், 330 6 மாற்றுத்திறனாளிகள் உட்பட வேலை நாடுநர்கள் பணி நியமன ஆணைகளை பெற்றனர். மேலும், 677 வேலை நாடுநர்கள் 2 ஆம் கட்ட நேர்கானலுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மகளிர் திட்டத்தின் சார்பில் வட்டார வணிக வள மையம் (BBRC) நிதித்திட்டத்தின் கீழ் சிறு குறு தொழிலுக்கான கடனுதவி ரூபாய் 50 ஆயிரம் வீதம் 10 நபர்களுக்கு 5 இலட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மகளிர் சுயஉதவிக்குழக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில், துணை இயக்குநர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மகாராணி, மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ்குமார், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, ஆசிரிய பெருமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *