Skip to content
Home » திருச்சிக்கு 2ம் தேதி பிரதமர் மோடி வருகை…. பாதுகாப்பு பணி குறித்து ஐஜி ஆய்வு…

திருச்சிக்கு 2ம் தேதி பிரதமர் மோடி வருகை…. பாதுகாப்பு பணி குறித்து ஐஜி ஆய்வு…

  • by Authour

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக 2.81 லட்சம் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படாமல் இருந்த பட்டங்களை மோடி வழங்குகிறார். வரும் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 38 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பாரத பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழா நடைபெறும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில்,

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன்,
DiG பகலவன், SP வருண் குமார் ஆகியோர், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம்,
தேர்வு நெறியாளர் சீனிவாசராகவன் ஆகியோர் உடனிருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 2.81 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மோடி பட்டங்களை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *