திருச்சி நகரியம் கோட்டம், பொன்னகர் பிரிவுக்கு உட்பட்ட சில இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளை மாற்றியமைக்கும் பணி நடைபெற உள்ளதால் நாளை 15.07.2023 காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பகுதிகளான கருமண்டபம் மெயின்ரோடு, அமுதம் ஓட்டல் முதல் மாதா கோவில் வரை மற்றும் கல்யாண சுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
