திருச்சி நகரியம் கோட்டம், பொன் நகர் பிரிவுக்கு உட்பட்ட சின இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மிசிபாதைகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. ஆகையால் வரும் 30.06.2023 காலை 11.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பார்சன் அபார்ட்மென்ட், சக்தி நகர் 10 வது கிராஸ், ராம கிருஸ்ணா நகர்1 2 மற்றும் 3வது கிராஸ், ஆல்பா நகர் 1,2, மற்றும் 3வது கிராஸ், ஆல்பா நகர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் P. சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
