Skip to content
Home » திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் பேட்டி…

திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் பேட்டி…

  • by Senthil

திருச்சியில் வரும் பிப்ரவரி மாதம் 5ம்தேதி திருச்சி மாவட்டம், சிறுகனூரில் நடைபெற உள்ள இஸ்லாமியர் கல்வி மற்றும் அரசியல் உரிமை விழிப்புணர்வு மாநாட்டின் பணிகளை இன்று

காலை தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத்தின் மாநில தலைவர் சுலைமான், பொதுச் செயலாளர் அப்துல்கரீம், மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த மாநில பொதுச் செயலாளர் அப்துல்கரீம்….
இந்திய நாட்டிலே அனைவருக்கும் சமநீதி, சம உரிமை என்பதை அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது. அதற்கு மாற்றமாக 2014க்கு பிறகு பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பை இந்தியாவில் முஸ்லிம்களுக்கான உரிமைகளும், முஸ்லிம்களுக்கான பல்வேறு விதமான சலுகைகளும் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. சிறுபான்மை சமூக மக்கள் தொடர்ச்சியாக குறிவைக்கப்படுகிறார்கள்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெற உள்ளது.
இதில் லட்சக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்க உள்ளனர் என தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் என் கைக்கூலி தான் தமிழ்நாடு சொல்லக்கூடாது என கூறுகிறார். அவருக்கு விருப்பம் இல்லை என்றால் வேறு மாநிலத்துக்கு ஆளுநராக போகலாம் ஆர்எஸ்எஸ் சிந்தனை கொண்டவர் அப்படித்தான் சொல்லுவார். முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று தான் சித்தரிப்பார் தமிழ்நாடு நலன் குறித்து சிந்திக்க மாட்டார். தொடர்ச்சியாக அரசியல் பகையை வளர்த்து அதன் ஊடாக குளிர் காயக்கூடிய போக்குதான் ஆர்எஸ்எஸ் சிந்தனை உள்ள அவருக்கு இருக்கும்.

பயங்கரவாதிகள் என பொய்யான எந்தவித ஆதாரமுமின்றி சொல்கிறார் அவர்கள் அதிகாரத்தில் உள்ளதால் விரும்பியதை செய்வார்கள் இஸ்லாமிய இயக்கங்களை தடை செய்வது மட்டுமல்ல கேரளாவில் உள்ள பத்திரிகையாளர்களை கூட தேசவிரோதி எனக்கூறி சிறையில் வைத்துள்ளனர்.

பயங்கரவாதத்தின் பெயரால் தடை செய்ய வேண்டும் என்றால் ஆர்எஸ்எஸ் அமைப்பு முதன்மையாக தகுதி பெற்ற அமைப்பு அந்த அமைப்பை தடை செய்யட்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வில்மாவட்டத் தலைவர் உழா முகமது தொண்டர் அணி செயலாளர் மாலிக்முகமது ஊடகப்பிரிவு நிர்வாகி ரஹ்மத்துல்லாஹ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!