Skip to content
Home » தமிழ்நாடு உயர்நிலை-மே.பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் பொதுக்குழுக்கூட்டம்….

தமிழ்நாடு உயர்நிலை-மே.பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் பொதுக்குழுக்கூட்டம்….

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சி மாநிலத்தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அழகிரிசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். திருச்சி மாவட்டத்தலைவர் மாநிலப்பொதுச்செயாளர் மாரிமுத்து இயக்கச் செயல்பாடுகள் பற்றியும் மாநிலப்பொருளாளர் இளங்கோ நிதியும் பொது நிகழ்வு பற்றியும், மாநில அமைப்புச்செயலாளர்

நவநீதக்கிருஷ்ணன் நன்றியுரையும் நிகழ்த்தினர். இக்கூட்டத்தில் புரவலர்கள் அருள்சுந்தர்ராஜன், முனைவர் சாமி சத்திய மூர்த்தி, நடராஜன், ரவிச்சந்திரன், முனைவர்பீட்டர்ராஜா,ராஜீ மற்றும் மாநில தலைமை நிலையச் செயலாளர், மாநிலத்துணைத் தலைவர்கள் மாநில இணைச்செயலாளர்கள், மாநில மகளிர் அணி அமைப்பாளர்கள் மாநில சட்ட செயலாளர்கள், மாவட்டப்பொறுப்பாளர்கள் கொண்டனர்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் :

01.01.2018ற்கு பிறகு பதவி உயர்வு பெற்ற முதுகலைஆசிரியரிலிருந்து பணிமாறுதல் மூலம். பதவிஉயர்வு பெற்று உயர்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் நிம்மதியாக நிர்வாகம்செய்யும் சூழல்தற்போது இல்லை. பள்ளிக்கல்விபணியை ஆகவே 01.01.2018 ற்கு பிறகு பதவிஉயர்வு பெற்ற முதுகலை ஆசிரியரிலிருந்து பணிமாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்ற உயர்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு பணிநிலையில் மற்றும் எதிர்காலப்பதவி உயர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாவண்ணம் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமைப்பட்டியலும் முது கலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமைப்பட்டியலும் தயார் செய்து மேல்நிலைபப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். அரசு உயர்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியரிடம் மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் செல்ல விருப்பா அல்லது. மாவட்டக்கல்வி அலுவலராக பதவி உயர்வில் செல்ல விருப்பமா என்று விருப்பத்தை(Option) ஒவ்வொரு ஆண்டும் தெரிவிக்கும் வகையில் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

மேலும், 2018- ஆம் ஆண்டுவரை 5:2 மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி என்ற நடைமுறையில் இருந்த உயர்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக 7:2 என மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலிருந்த 5:2 என்ற விகிதாச்சாரத்திலேயே மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.  2019-2020 பள்ளிகளுக்கு கல் ஆண்டில் கோவிட்-19 தொற்று கரணமாக இயலாத நிலை ஏற்பட்டதால் மாணவர்களிடமிருந்து பெற்றேர் ஆசிரியா கழக நிதி பெறுவதிலிருந்து விலக்களித்து ஆணை பிறப்பிக்க வேண்டும். மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்தில் 40 சதவீதம் அரசு உயர்நிலைப்பள்ளித்தலைமைஆசிரியர்களுக்கு, 35சதவீதம் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமும், 25 சதவீதம் நேரடி நியமன மூலமும் நியமனம் செய்யப்படுகிறார்கள். மாவட்டக்கல்வி அலுவலர் பணியிட நியமனத்தில் கடைப்பிடிக்கப்படும் 40:35:25 என்ற விகிதாச்சாரத்தையே முதன்மைக்கல்வி அலுவலர், இணை இயக்குநர், இயக்குநர் பதவி உயர்விலும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

இதன் மூலம் ஆசிரியராகப்பணியில் ஆசிரியராகப்பணியில் சேர்ந்த ஒரு சேர்ந்த ஒரு சிலருக்கு இணை இயக்குநர் மற்றும் இயக்குநர் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதுவரை எந்த ஆசிரியரும் முதன்மைக்கல்வி அலுவலர் பணிநிலைக்கு மேல் கல்வித்துறையில் பதவி உயர்வு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அரசால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரணவிடுப்பு ஊதியத்தினையும், 01.01.2022 மற்றும் 01.07.2022 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிலுவைத்தொகையினையும் வழங்க வேண்டும்.ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் மாநில அரசும் அகவிலைப்படி அறிவிக்கவேண்டும் என உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *