திருச்சி, அரியமங்கலம் காமராஜர் நகர் பகுதியில் 3 வாலிபர்கள் அங்கு நின்று கொண்டு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடம் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அரியமங்கலம் போலீஸ் ஸ்டேசனிற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அப்பகுதியில் அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகளை விற்றுக் கொண்டிருந்த காமராஜர் நகர் அப்துல் கலாம் ஆசாத் தெருவை சேர்ந்த பாபு என்பவரது மகன் அம்ருதீன் (22), அதே பகுதிகளை சேர்ந்த சையது முஸ்தபாவின் மகன் சாகுல் ஹமீது (22) மற்றும் நாகூர் ஹனியின் மகன் முகமது சித்திக் (24) ஆகிய 3 பேரையும் கையும் களவுமாக பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகளையும், 5000 ரூபாய் பணத்தையும், 2செல்போன்களையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
