திருச்சி, துறையூர் ஏ. கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்தவர் பழனி யாண்டி (வயது 68 )கூலி தொழிலாளி.
இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் குடிபோதையில் அங்குள்ள ராஜேந்திரன் என்பவரது வேளாண் தோட்டத்தில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பழனியாண்டி இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இது குறித்து அவரது மனைவி கமலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை…
திருச்சி . சோமரசம்பேட்டை அருகே உள்ள ராமநாத நல்லூர் குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன்( 55)
தொழிலாளியான இவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்தார்.
நோயின் பிடியிலிருந்து மீள முடியாத விரக்தியில் லட்சுமணன் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்தார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு டாக்டர்கள்
தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் லட்சுமணன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் அஜய் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.