திருச்சி, பொன்மலை ரயில்வே ஆஸ்பத்திரியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், கேள்வி கேட்ட காரணத்திற்காக
டி.ஆர்.இ.யூ. நிர்வாகி ராஜாவை நியாயமற்ற முறையில் இடமாற்றம் செய்ததை கண்டித்து, ரயில்வே மருத்துவமனையில் உள்ள
மருந்து, மாத்திரை பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும், ஆஸ்பத்திரியில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் சார்பில் பொன்மலை ரயில்வே ஆஸ்பத்திரி முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டி ஆர் இயூ திருச்சி கோட்ட தலைவர்
கரிகாலன் தலைமை தாங்கினார். இதில் பொது செயலாளர் ஹரிலால்,சி ஐ டி யு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன்
ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தினர் மற்றும் கோட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பொன்மலை ஓப்பன் கிளை பொறுப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
