புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சேர்ந்தவர் ஷேக் மொய்தீன் ( 50. ) இவர் துபாய் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலைய வந்துள்ளார் . அங்கு இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ஷேக் மொயீதீன் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பிறந்த தேதி, பிறந்த ஊர் மற்றும் பெயரை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. அவரை இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் ஷேக் மொய்தீனை கைது செய்தனர். தஞ்சாவூர் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (43) இவர் சிங்கப்பூர் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்துள்ளார் .அங்கு இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் வெள்ளையம்மாள் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பிறந்த ஊர், பிறந்த தேதி மற்றும் பெயரை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது அவரை இம்மெகிரேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் வெள்ளையம்மாளை கைது செய்தனர்.
சிவகங்கை காரைக்குடி சேர்ந்தவர் திருநாவுக்கரசு (53. ) இவர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அங்கே இம்மிகி ரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் திருநாவுக்கரசு போலி ஆவனங்கள் சமர்ப்பித்து தாய் பெயர் பிறந்த ஊர் மற்றும் பிறந்த தேதியை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது அவரை இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் போலீஸில் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் திருநாவுக்கரசை கைது செய்தனர்.
ராமநாதபுரம் சித்தர் கோட்டையை சேர்ந்தவர் அகமது மொய்தீன் (50). இவர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அகமது மொய்தீன் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பெயர், பிறந்த தேதி மற்றும் பிறந்த ஊரை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. அவரை இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் அகமது மொய்தீனை கைது செய்தனர்.