திருச்சி பாலக்கரை வரகனேரி சந்தானபுரத்தை சேர்ந்தவர் முகமது யூசுப் இவரது மகன் முகமது ஆஸ்கின் (வயது 21)இவர் கடந்த சில மாதம் காலமாக காச நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டின் அருகில் உள்ள ஒரு டிபன் கடையில் முட்டை புரோட்டா வாங்கி சாப்பிட்டு உள்ளார்.சிறிது நேரத்தில் அவருக்கு தொடர்ச்சியாக இருமல் ஏற்பட்டு பிறகு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு முகமது ஆஸ்கினை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.