திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் திருமலையூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்( 23). இவர் +1 படித்துவிட்டு டிரைவராக பணிபுரிந்து வருகிறார். தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி(20). இவர் திருமலையூரில் உள்ள தனது சித்தப்பா ராஜா என்பவர் வீட்டில் தங்கி 6 முதல் 8ம் வகுப்பு வரை படித்துள்ளார். அங்கு இருந்தபோது பாஸ்கரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 2வருடங்களாக 2 பேரும் காதலித்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் பெண் வீட்டில் நந்தினியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 3ம் தேதி நந்தினி வீட்டை விட்டு வௌியேறியுள்ளார். பின்னர் நண்பர்கள் முன்னிலையில் ஏவூர் விநாயகர் கோவிலில் பாஸ்கரணை திருமணம் செய்துக்கொண்டுள்ளார் நந்தினி. பெற்றோருக்கு தெரிந்தால் என்னவாகுமோ என்ற பயத்தில் முசிறி போலிஸ் ஸ்டேசனில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவைத்து விசாரணை மேற்கொண்டனர். பெண் வீட்டார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு அறிவுரை கூறி புதுமணத் தம்பதிக்கு எந்தவித இடையூறும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். மாப்பிள்ளை வீட்டார் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து சந்தோசமாக புதுமண ஜோடியை தங்கள் வீடடிற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.