திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் மேல வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 25. இவர் கேட்டரிங் முடித்துவிட்டு குளித்தலையில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இதே போல் தொட்டியம் வட்டம் மகேந்திரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரி(19). இவர் +2 படித்துவிட்டு முசிறியில் உள்ள தனியார் உள்ளூர் டிவி சேனலில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் பஸ்சில் பயணித்த போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.இதில் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இதையறிந்த பெண்ணின் வீட்டார் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் யோகேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி 13ம் தேதி வெள்ளூர் விநாயகர் கோவிலில் காதலன் ஆறுமுகத்தை நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்தார். பின்னர் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு கோரி முசிறி போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம் அடைந்தனர். காவல் உதவி ஆய்வாளர் சத்ய விநாயகம் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து விசாரணை செய்தார். பெண் வீட்டார் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை புதுமண தம்பதியருக்கு எந்தவித இடையூறும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். மாப்பிள்ளை தரப்பினர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து மகிழ்ச்சியுடன் புதுமணத் தம்பதியரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக முசிறி போலீஸ் ஸ்டேசனில் பரபரப்பு ஏற்பட்டது.