திருச்சி மாவட்டத்தில் கொலை மற்றும் குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளர்களை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் நேரில் அழைத்து மேற்படி வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பாராட்டு தெரிவித்தார். மேலும் போலீசாருக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதியும் வழங்கி வெகுவாக பாராட்டினார்.