தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலிருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி உள்ளது.
இதனால் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் பொதுமக்கள் குறிப்பாக வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள
மகாத்மா காந்தி ரவுண்டானா சிக்னலில் மாநகர போலீஸ் சார்பாக தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சிக்கு வாகன ஓட்டிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் மகிழ்ச்சியும் அடைந்து வருகின்றனர். மேலும் இதே போன்று வாகன ஓட்டிகள் வெயிலில் தாக்கத்திலிருந்து சற்று இளைப்பாற மாநகரின் பல்வேறு சிக்னல்களில் தற்காலிக மேற்கூரை அமைக்கும் முயற்சியை மாநகர போலீசார் எடுத்து வருகின்றனர்.