Skip to content
Home » திருச்சியில் கடத்தப்பட்டவர் கொலை செய்யும் கடைசி நிமிசத்தில் மீட்ட போலீசார்…..

திருச்சியில் கடத்தப்பட்டவர் கொலை செய்யும் கடைசி நிமிசத்தில் மீட்ட போலீசார்…..

  • by Authour

திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(29). இவர் பொன்னகர் 3வது கிராஸில் குளோபல் அகாடமி & கன்சல்டன்ட் அண்ட் பேஸ்மென்ட் சர்வீஸ் என்கிற வெளிநாட்டு விசா ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சப்- ஏஜென்ட் ஆக விருதாச்சலத்தை சேர்ந்த வினோத் என்பவர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் வினோத்திற்கும் சந்திரசேகருக்கும் ஏஜென்சி சம்பந்தமாக பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொன்னகரில் உள்ள ஏஜென்சிக்கு தனது ஆட்களுடன் வந்த வினோத், சந்திரசேகர் மற்றும் அங்கு பணியாற்றிய சக்திவேல் என்கிற மணிகண்டன் (27) ஆகியோரை மிரட்டி ஒரு காரில் கடத்தி கொண்டு சென்றுள்ளார். சென்னை பைபாஸ் பழைய பால்பண்னை அருகே டி மார்ட் அருகே மணிகண்டனை மட்டும் காரில் இருந்து இறக்கி விட்டுவிட்டு சந்திரசேகரை கடத்தி அவர் கொண்டு சென்றுள்ளனர். தப்பி வந்த மணிகண்டன் இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் சேரன் தலைமையிலான போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். விசாரணையில் சந்திரசேகர் மற்றும் வினோத்தின் செல்போன் டவர்கள் விருதாச்சத்தில் இருப்பதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் டீம் உடனடியாக புறப்பட்டு விருதாச்சலத்தில் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். அப்பொழுது ஒரு அறைக்குள் சந்திரசேகரை கட்டி வைத்து வைத்து வினோத் மற்றும் அவரது ஆட்கள் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தனர். அதிரடியாக உள்ளே சென்ற போலீசார் தடுத்து நிறுத்தி சந்திரசேகரை மீட்டதோடு, வினோத் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜதுரை ஆகியோரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடத்தல்காரர்கள் தாக்கியதன் காரணமாக சந்திரசேகருக்கு, உடலில் எலும்பு முறிவு உள்ளிட்ட பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த ஆள் கடத்தல் வழக்கில் போலீசார் சில நிமிடங்கள் தாமதமாக சென்றிருந்தால் கூட கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *