கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு 58 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலஆண்டுகாலமாக சாராயம் கல்வராயன்மலைப்பகுதியில் காய்ச்சப்பட்டு அங்கிருந்து சப்ளை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தொடர்ந்து 4 நாட்களாக கல்வராயன்மலை பகுதியில் போலீசார் சாராய வேட்டை நடத்தி வருகின்றனர். இன்றைய தினம் 20 போலீசார் கல்வராயன்மலை காட்டுப்பகுதியில் உள்ள சாராய ஊறல்களை தேடி சென்றனர். இந்த நிலையில் ரெய்டுக்கு சென்ற 7 திருச்சி ஆயுதப்படை போலீசார் இன்று மதியம் உணவிற்காக பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. உணவிற்காக சென்ற 7 பேரும் சுமார் 3 மணி நேரமாக வரவில்லை. அவர்களின் செல்போன்களும் கிடைக்கவில்லை. போலீசார் 7 பேரும் எங்கே சென்றார்கள் என்கிற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் போலீசார் 7 பேரும் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் அமர்ந்து இருந்து விட்டு திரும்பி விட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது..
சாராய வேட்டைக்கு சென்ற 7 திருச்சி போலீசார் “மிஸ்சிங்”… என பரபரப்பு
- by Authour