திருச்சி மத்திய மண்டலத்தில் காவல்துறையினரால் வருகின்ற 25.03.2023- ஆம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கலையரங்கத்தில் திருச்சிமத்திய மண்டல காவல்துறை மற்றும் திருச்சி மாநகர காவல்துறையில் தற்போது பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் சிறைத்துறையினர் ஆகியோரின் குழந்தைகள் மற்றும் மனைவி/கணவன்மார்களுக்கு மாபெரும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
அதுசமயம், காவல்துறையினரின் குடும்பத்தில் வேலை தேவைப்படும் குழந்தைகள் மற்றும் மனைவி/கணவன்மார்கள் மேற்கண்ட வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் சிறைத்துறையினரின் ஆண்/பெண் குழந்தைகள் மற்றும் மனைவி/கணவன்மார்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களது பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொலைபேசி எண்கள்:
சிவராஜ், காவல் ஆய்வாளர்
94981 65533, 93454 23925
ரமேஷ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்
94430 94489
திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட மற்றும் மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் சிறைத்துறையினரின் ஆண்/பெண் குழந்தைகள் மற்றும் மனைவி/கணவன்மார்கள் அந்தந்த மாவட்ட காவல் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தங்களின் பெயரினை பதிவு செய்து வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.