கடலூர் பண்ருட்டி மளிகை மேடு பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (வயது 26) இரண்டாம் நிலை காவலரான இவர் தற்போது திருச்சி ஐஜி அலுவலக அதி விரைவுப் படையில் சுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது செல்போன் பழுதடைந்தது. தனது செல்போனை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு செல்போன் பழுது நீக்கும் கடையில் அதை சரி செய்ய கொடுத்தார். அதற்கு கடைக்காரர் கூடுதல் தொகை கேட்டுள்ளனர். அதிர்ச்சி அடைந்த காவலர் இவ்வளவு தொகை எதற்கு என கேள்வி எழுப்பிய போது கடைக்காரருக்கும் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திருச்சி கருமண்டபம் ஐ.ஓ.பி. நகர் பகுதியைச் சேர்ந்த கடைக்காரர் சிராஜுதீன் (24) மற்றும் கடை ஊழியர் நூர்தீன் ஆகிய இருவரும் சேர்ந்து போலீஸ்காரரை கெட்ட வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரதீப் கண்ட்ரோல்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிராஜுதீனை கைது செய்தனர்.
திருச்சியில் போலீஸ்காரரரை தாக்கிய மொபைல் கடைக்காரர் கைது….
- by Authour
