பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவல் அதிகாரிகள் குறித்தும் அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.இதனால் அவரை கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த பெண் காவலர் ஒருவரும், சவுக்கு சங்கர் மீது கொடுத்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார், சவுக்கு சங்கர் மீது, ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுப்படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடர்பாக திருச்சி போலீசாரும் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இது தொடர்பான ஆவணங்களை கோவை சென்று திருச்சி போலீசார் சவுக்கு சங்கரிடம் கொடுத்தனர்.
