திருச்சியில் அரிஸ்டோ இரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலை விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் என்ற தலைமைக் காவலர் உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்திருந்தார்.
அதன்படி, தற்போது உயிரிழந்த தலைமைக் காவலர் ஸ்ரீதரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.