திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் சந்திரமோகன் இவர் சக போலீசாருடன் அரியமங்கலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது அரியமங்கலம் அண்ணா நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் முத்து குமார் தனது தம்பிகளான இளவரசன் (25),சரவணன் (23) ஆகிய மூன்று பேரும் லோடு ஆட்டோவில் வந்த பொழுது அவர்களை மறித்து சோதனை
செய்தப் போது அவர்கள் வாகனத்தில் 2 அரிவாள்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் சகோதரிகள் ரேணுகாதேவி, கிருஷ்ணவேணி ஆகியோரும் சேர்ந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு சந்திரமோகன் மற்றும் காவலர் வெற்றி ஆகியோரை கைகளால் தாக்கி அரிவாள் காட்டி மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து சந்திரமோகன் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமார், இளவரசன், சரவணன், ஆகிய மூன்று பேரை கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் ரேணுகாதேவி, கிருஷ்ணவேணி ஆகியோரை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,