திருச்சி, லால்குடி அருகே உள்ள பெருவளப்பூரில் வீட்டில் சட்டத்திற்கு எதிராக பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சிறுகனூர் காவல் உதவி ஆய்வாளர் கேசவமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது ராஜேந்திரன் என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து ராஜேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 3 லிட்டர் பெட்ரோலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
