தஞ்சை மாவட்டம், பாபநாசம் தேர்வு நிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி துணை தலைவர் பூபதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என சமத்துவ பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், பிரேம்நாத் பைரன். ஜாபர் அலி, கீர்த்திவாசன், பாலகிருஷ்ணன், பிரகாஷ், கோட்டையம்மாள், கெஜலட்சுமி, விஜயா, சமீரா பர்வீன், புஷ்பா சக்திவேல், முத்துமேரி மைக்கேல்ராஜ், தேன்மொழி உதயகுமார், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.