Skip to content
Home » மாநகராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு.. திருச்சியில் சாலை மறியல்….

மாநகராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு.. திருச்சியில் சாலை மறியல்….

  • by Authour

திருச்சி, சென்னை உள்பட 16 மாநகராட்சிகள்  எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர், குமாரவயலூர் ஆகிய ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று    காலை திருச்சி அடுத்த சோமரசம்பேட்டையில் உள்ள ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி வீட்டை முற்றுகையிட வந்தனர்.

300 பெண்கள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள்  அங்கு வந்து  திரண்டனர். தகவல் அறிந்ததும் சோமரசம்பேட்டை போலீசார் வந்து பொதுமக்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அவர்கள்  திருச்சி வயலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் தோகைமலை யில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையம் வரும் பஸ்கள், திருச்சி – வயலூர் செல்லும் பஸ்கள் என 20க்கும் மேற்பட்ட பஸ்கள்  மறியலில் சிக்கிக்கொண்டன. இந்த பஸ்களில் தான் திருச்சிக்கு வேலைக்கு வருவோர்,  கல்வி நிலையங்களுக்கு வருவோர்  வழக்கமாக வருவார்கள்.  அவர்களும் மறியலில் சிக்கி கொண்டு அவதிப்பட்டனர். இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் மறியல் செய்தவர்களில்  சுமார் 300 பேரை கைது செய்தனர்.   சுமார் ஒன்றரை  மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து  சீரானது.