திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த பேருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கங்கசாகரம் என்ற இடத்தில் இன்று அதிகாலை வந்தபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் உள்பட 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் 4 பேர் விபத்து நடந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். இறந்தவர்கள் திருச்சியை சேர்ந்தவர்கள் , விபத்துக்குள்ளான பஸ் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அழைத்து சென்ற பஸ் என தெரிகிறது. திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் அனைவரும் சிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கடும் பனிமூட்டம், மற்றும் டிரைவர் கண் அயர்வு ஆகிய காரணங்கள் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.