தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்க த்தின் சார்பில் திருச்சியில் வரும் 19ம் தேதி ஓய்வூதியர் தின விழா கொண்டாடப்படுகிறது. புத்தூர் மதுரம் ஹாலில் காலை 10.15 மணிக்கு விழா தொடங்குகிறது. மாவட்டத் தலைவர் ப. அருள்ஜோஸ் தலைமை தாங்கி கொடியேற்றுகிறார். மாவட்ட துணைத்தலைவர்கள் ஆர்தர் காட்வின், பழனியாண்டி, மணி, வட்டத் தலைவர்கள் சுதந்திரநாதன், முத்துக்கிருஷணன், வரதராஜன், விக்டர் ஜோசப் ராஜ், ஷேக் தாவூத், தாமஸ், குஞ்சிதபாதம், தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
மாவட்டத் துணைத்தலைவர் ஜெகநாதன் வரவேற்கிறார். மாநில செயலாளர் வி. பாலகிருஷ்ணன் நோக்கவுரையாற்றுகிறார். முதியோருக்கான இயற்கை மருத்துவம் குறித்து டாக்டர் சுகுமார் சிறப்புரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. மாவட்ட பொருளாளர் எஸ். சந்திரசேகரன் நன்றி கூறுகிறார். விழாவில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி மாவட்டத் தலைவர் அருள்ஜோஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.