பாராளுமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படவாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தை பொருத்தவரை திமுக-அதிமுக-பாஜ என 3 கட்சிகளின் தலைமையில் 3 அணிகள் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் திருச்சி பாராளுமன்ற தேர்தலில் யார் யாருக்கு வாய்ப்பு என பார்ப்போம். திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தான் திருச்சி பாராளுமன்ற தொகுதி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுகரசர் தான் தற்போதைய திருச்சி எம்பி. இந்த முறை திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா? அப்படி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டாலும் திருநாவுகரசர் தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அடுத்ததாக அதிமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் அதிமுக போட்டியிடும் என ஒரு தகவல் கூறப்படுகிறது. இல்லை இல்லை கடந்த முறை போலவே தேமுதிகவிற்கு தான் திருச்சி ஒதுக்கப்படவுள்ளது என்கின்றனர் விபரம் தெரிந்த அதிமுகவினர். இறுதியாக பாஜக கூட்டணியை பொருத்தவரை திருச்சி தொகுதியில் தொழிலதிபர் ஜெயகர்ணா போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர் என்பதோடு திருச்சியில் ஆக்சினா என்கிற பெயரில் கார்ஷோரூம், ஒட்டல், அப்பாட்மெண்ட்ஸ் என பல தொழில்களை மேற்கொண்டு வரும் ஜெயகர்ணா கடந்த 2 ஆண்டுகாலமாகவே பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். திருச்சி பாஜகவில் சுறுசுறுப்பாக இருக்க கூடியவர் என்பதோடு அரசியலுக்கு முக்கியமானதாக கருதப்படும் ‘வைட்டமின் ப’ விற்கு பஞ்சம் இல்லை என்பதாலும் திருச்சி தொகுதியின் பாஜக வேட்பாளர் ஜெயகர்ணா தான் என்பதில் சந்தேகமில்லை என்பதே பாஜகவினர் கூறும் தகவல்..
திருச்சி தொகுதி பாஜ வேட்பாளர் தொழிலதிபர் ஜெயக்கர்ணா.. ?
- by Authour
