திருச்சி மாநகராட்சி அவசரக்கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி துணை ஆணையர் க.பாலு, துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன் , துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா மற்றும் நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசியதாவது:
வருகின்ற மே 9 ந்தேதி திருச்சி மாநகராட்சி சார்பில் பஞ்சப்பூர். பேருந்து நிலையம் திறப்பு விழா நடக்கிறது. மற்றும் லாரி முனையம், ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் அமைய அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார். அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு விழாவில் முதல்வர் பட்டா வழங்குகிறார்.இது தொடர்பான தீர்மானம் மாநகராட்சி மன்றத்தில் வைக்கப்படுகிறது. அதனை நிறைவேற்றித் தர வேண்டும்.
திருச்சி மாநகராட்சி பகுதியில் 43 ஆயிரத்து 763 நாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது .அதில் 21 ஆயித்து 721 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது, இதேபோன்று ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி சென்ற வாரம் முதல் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் சுற்றி திரிந்த 767 மாடுகளை மாநகராட்சி நிர்வாகம் பிடித்து அதற்கு அபராதம் ரூபாய் 19 லட்சம் விதித்துள்ளது.
பிடிப்பட்ட மாடுகள் ஏலம் விடப்பட்டு ரூபாய் 3 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.மாடுகளை ஏலம் விட்ட மற்றும் அபராதம் விதித்த வகையில் திருச்சி மாநகராட்சிக்கு ரூபாய் 23 லட்சத்து 23 ஆயிரம் பணம் வசூல் ஆகியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மதிவாணன் (மண்டல தலைவர்): கடந்த மாமன்ற கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .டிவிஎஸ் டோல்கேட் பகுதிக்கு கலைஞர் டோல்கேட் என்று பெயர் வைக்கபட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் டிவிஎஸ் குமும குடும்பத்தினர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து தங்களுடைய குடும்பப் பெயரை மாற்ற வேண்டாம் என்று கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெயரை மாற்ற வேண்டாம் என்று உத்தரவு விட்டார்.இந்த திராவிட மாடல் அரசு எல்லோருக்கும் பொதுவான அரசு என்பதை தெளிவுபடுத்தும் விதமாக முதலமைச்சர் இந்த விஷயத்தை நடந்து கொண்டிருப்பது நமக்கெல்லாம் உதாரணமாக விளங்குகிறது, எனவே தமிழக முதல்வர்க்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ரெக்ஸ் (காங்)திருச்சியில் அமைய உள்ள மத்திய நூலகத்திற்கு காமராஜர் பெயர் வைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்து இருப்பதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
ஜவகர் (காங்)திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள சிவாஜி சிலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய நூலகத்திற்கு காமராஜர் பெயரை வைத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
சுரேஷ்(இ.கம்யூ) -:திருச்சி மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த தகவல் சேவை மையம் நல்ல முறையில் செயல்பட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் பஞ்சப்பூர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சுமார் 15 ஆண்டு காலத்திற்கு பராமரிப்பு பணியினை மேற்கொள்ளவும் பேருந்து நிலையத்தை முறையாக இயக்கவும் நகராட்சி நிர்வாக இயக்குனரின் நிர்வாக அனுமதி பெறுவதற்கு கருத்துரு அனுப்பி வைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மேலும் முதல்வர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 50,000 மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதையொட்டி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வார்டுகளில் எந்தெந்த பகுதிகளில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கான தடையில்லா சான்றை வழங்குவதற்கு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் நடைபாதை விற்பனை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் கீழ் வியாபாரிகளின் வாழ்வாதார பாதுகாப்பை கருதி நகர விற்பனை குழுவின்படி ஆறு உறுப்பினர்கள் விற்பனை குழு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே வருகின்ற மே மாதம் 12ம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. 19ம் தேதி வேட்பமனு விண்ணப்பத்திற்கான இறுதி நாள். 20ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசலனை செய்யப்படுகிறது.
21ந்தேதி வேட்பு மனு திரும்ப பெறப்படுகிறது. 22ந்தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. 30ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளது. மாலை 6மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு டாக்டர் கலைஞர் பெயரும், லாரி முனையத்திற்கு அண்ணா பெயரும்,ஒருங்கிணைந்த காந்தி மார்க்கெட்டுக்கு தந்தை பெரியார் பெயரும் வைப்பது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.