நாடு முழுவதும் 41 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் பரிசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 554 ரயில் நிலையங்களை மறுசீரமைத்தல் மற்றும் 1500 சாலை மேம்பாலம், அடிபாலம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல் துவக்கி வைத்தல் ஆகியவற்றினை பாரத பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலமாக துவக்கி வைத்தார்
இந்த நிலையில் திருச்சி பொன்மலை நார்த் டி ரயில்வே கேட் சுரங்கப்பாதை, மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் சுரங்கப்பாதை, பொன்மலை பழைய மஞ்சத்திடல் சுரங்கப்பாதை மற்றும் பொன்மலை மஞ்சத்தடல் உயர்மட்ட மேம்பாலம் ஆகியவற்றிற்கான அடிக்கல்
நாட்டுதல் மற்றும் சுரங்கப் பாதைகளை பாரத பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இந்த நிலையில் இதில் மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகர் சுரங்கப்பாதை பணிகள் முடிக்கப்படாமலேயே பிரதமர் மோடி சுரங்கப்பாதையை திறந்து வைத்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பணிகள் முடிக்காமலேய சுரங்கப்பாதையைத் திறந்து வைப்பதற்கு அவசியமென்ன ஏன் இவ்வளவு நாளாக அதன் பணிகளை முடிக்கவில்லை என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது சம்பந்தமாக அந்த சுரங்கப்பாதையில் பணிகளை முடிக்காத ரயில்வே உயர் அதிகாரிகள் மீதும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.