திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் பாம்பாலாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 16-வது ஆண்டு திருவிழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து நேற்று கணபதி ஹோமமும் பின்னர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம், பால்குடம், முப்பாறி எடுத்து ஊர்வலமாக வந்து பாம்பாலாயி அம்மனுக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். பின்னர்பக்தர்கள் 500க்கும் மேற்பட்டடோர் புனித நீர் மற்றும் பால் குடம் எடுத்து பாம் பாலாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இந்த விழாவில் சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனையை செலுத்தியதோடு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதமாகஅன்னதானம் நடைபெற்றது