திருச்சி, வயலூர்ரோடு கோப்பு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து.இவரது மகன் நவீன் ( 28) இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெயிண்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நவீன் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடை பகுதியில் மயங்கி கிடந்தார்.அவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் நவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.