திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் இயற்கை அரணாக அமைந்துள்ளது பச்சைமலை இது கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இங்கு தற்போது பெய்து வரும் கனமழையால் மங்கலம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
திருச்சி மாவட்டத்தில் கோடைக் காலம் துவங்கி கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கோடை மழை மற்றும் அதைத்தொடர்ந்து கோடை வெயில் என்று மாறி மாறி வரும்
வித்தியாசமான கால நிலையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இங்குள்ள மக்கள் கோடை வாஸ்தளங்களை தேடி செல்கின்றனர்
சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது மங்கலம் அருவி திருச்சியிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்கலம் அருவிக்கு துறையூர் உப்பிலியபுரம் சோபனபுரம் வழியாக டாப் செங்காட்டுப்பட்டி வரை சாலைகள் சீரமைக்கப்பட்டு செப்பனிடப்பட்டு உள்ளதால் தங்கு தடை இன்றி போக்குவரத்து சென்று வருவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.
மலையை சுற்றி எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்து வைத்தது போல் தென்படுவதால் சுற்றுளாலா பயனிகளின் மனதை கொள்ளை கொல்லும் வகையில் உள்ளது ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் இப்பகுதி கோடை வாஸ்தலமாக அமைந்துள்ளது.