திருச்சி மாவட்டத்தில் ஜீயபுரம் ,சோமரசம்பேட்டை, பெட்டவாய்த்தலை, உள்ளிட்ட பகுதியில் அடிக்கடி சவ ஊர்வலங்களில் போக்குவரத்து சாலைகளில் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெண்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக ஊர்வலம் நடக்கிறது என தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் ஜீயபுரம் கடைவீதியில் கடந்த 26 ஆம் தேதி மாலை கொடியாலம் கிராமத்தில் இறந்து
போன கோகுல் என்பவரது இறப்பின் போது ஊர்வலமாக வந்து திருச்சி டு கரூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்து தகராறு ஈடுபட்ட வாலிபர்கள் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு தகராறில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தகராறு தொடர்பாக அப்பகுதியில் உள்ள CCTV கேமராவை ஆய்வு செய்து தகராறு ஈடுபட்ட சர்க்கார் பாளையத்தை சேர்ந்த கிறிஸ்டோ,விக்கி ஆகிய இரண்டு இளைஞர்களை அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்..