திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் விமான நிலையம் அருகில் உள்ள குண்டூர் பர்மா காலனியை சேர்ந்த இரண்டு வயது குழந்தை உணவு உட்கொள்ளும் போது தவறுதலாக ஊக்கை முழுங்கியது.
இந்நிலையில் குழந்தை மூச்சு விட சிரமப்பட்டதை அடுத்து என்ன காரணம் என்று தெரியாத பெற்றவர்கள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்திருந்தனர்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிகிச்சை பிரிவில் குழந்தையை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது தொண்டை பகுதியில் ஊக்கு இருப்பதனை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர் – இதனை அடுத்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு
அரசு மருத்துவமனையில் உள்ள காது மூக்கு தொண்டை துறையின் தலைமை மருத்துவர் அண்ணாமலை தலைமையிலான மருத்துவ குழுவினர் உடனடியாக குழந்தைக்கு மயக்கம் கொடுக்கப்பட்டு டியூப் வாயிலாக ஊக்கை வெளியே எடுத்தனர்.
இந்த நிலையில் தற்போது குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.