திருச்சி பெரிய மிளகு பாறை புது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (52) இவரது மகள் கலை பிரியா ( 22) சம்பவதன்று வீட்டிலிருந்து அருகில் உள்ள பேக்கரிக்கு சென்ற பிரியா நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது தந்தை சுப்பிரமணி செசன்ஸ்கோர்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதேபோன்று திருச்சி பொன்மலை கணேசபுரம் ஆறாவது தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி இவரது மனைவி பார்வதி (41) இவர் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் பார்வதி மகளிர் சுய உதவி குழுவிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் கடன் காரர்கள் தொல்லை காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியே சென்றதாக தெரிகிறது. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து விநாயகமூர்த்தி பொன்மலை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.