திருச்சி தெற்கு காட்டு சீதாக்காதிதெருவை சேர்ந்தவர் சரோஜா ( 76 ). அவரது மகன் சசிகுமார் (40) மனநலம் பாதிக்கப்பட்டவர். இருவரும் திங்கள்கிழமை இரவு காட்டூரில், திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது திருவெறும்பூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற டூவீலர் அவர்கள் மீது மோதியது. இதில் சரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது மகன் சசிக்குமார், டூவீலர் ஓட்டி வந்த துறையூரை சேர்ந்த பிச்சை மகன் பிரகாஷ் (23) 2 பேரும் பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
