திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தொட்டியம் ஐயப்பன் நகரில் வசித்து வரும் மூதாட்டி ராஜேஸ்வரி(65) என்பவரை கை கால்களை கட்டி போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு கொலை நடந்த வீட்டில் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்..
வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதால் பணம் நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் அருகே வளையப்பட்டியில் வசித்து வரும் மகன் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர் தான் திருட்டு போன பொருட்களின் மதிப்பு தெரிய வரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொலை நடந்த இடத்தில் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.