திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள பெரிய அணைக்கரைப்பட்டி மணியாரம்பட்டியைச்சேர்ந்தவர் ரெங்கசாமி மனைவி பிச்சையம்மாள் (60) .இவரது கணவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியான பிச்சையம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. இவர் அருகில் உள்ள தோட்டத்து வீட்டில் வசிக்கிறார். மேலும் வயது முதிர்வால் ஊன்றுகோல் உதவியுடன் நடப்பவர். இந்நிலையில் நேற்று காலை அவரது கணவர் வீட்டில் சென்று பார்த்தபோது பிச்சையம்மாளை காணவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தேடி பார்த்த போது வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் தவறு விழுந்தது தெரிய வந்தது. உடனடியாக கிணற்றில் இறங்கி பார்த்த போது அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து வையம்பட்டி போலிசாருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பெயரில் வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்த மூதாட்டியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டார்.
