Skip to content
Home » பல்லவனில் சிக்கிய அதிகாரி…. திருச்சியில் பரபரப்பு ..வீடியோ

பல்லவனில் சிக்கிய அதிகாரி…. திருச்சியில் பரபரப்பு ..வீடியோ

திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் ரயில்வே துறையில் ஓய்வு அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயிலில் இன்று காலை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் நிற்பதற்கு முன்பாகவே ஏற முயன்றுள்ளார் என கூறப்படுகிறது.இதனால்

அவர் தவறி விழுந்து நடைமேடைக்கும், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் பயணிகள் அவரை உடனடியாக மீட்டனர். பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக ஜெயச்சந்திரனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் காலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *