Skip to content
Home » திருச்சி மருத்துவமனையில் இறந்த அதிகாரி யார்? கொலையா…. பரபரப்பு

திருச்சி மருத்துவமனையில் இறந்த அதிகாரி யார்? கொலையா…. பரபரப்பு

  • by Authour

திருச்சி குண்டூர் பர்மா காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (38 )இவர் திருச்சி அருகே உள்ள மாத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.  முதுகு வலி காரணமாக திருச்சி சீனிவாசா  நகர் பகுதியில் இயங்கி வரும் ஜெயரங்கா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா ஆராய்ச்சி நிலையம் என்னும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சேர்ந்தார்.

ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை மருத்துவமனை அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.   டவுசர் மட்டும் அணிந்திருந்த நிலையில் அவர் பிணமாக தொங்கினார். இதனை கண்ட மருத்துவமனை  ஊழியர்கள்,  பாலசுப்பிரமணி  உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த உறவினர்கள், குடும்பத்தினர் அலறியடித்து மருத்துவமனைக்கு வந்தனர். அவரது உடலை பார்த்து, அவர் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை.  கொலை செய்து தொங்கவிட்டு இருக்கிறார்கள் என கூச்சல் போட்டு அழுதனர். இதனால் அந்த மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.   உடனடியாக அரசு மருத்துவமனை போலீசார் அங்கு வந்து  பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உடல் பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து  பாலசுப்பிரமணியனின் தாய் கூறியதாவது:

எனது மகன் முதுகு வலி சிகிச்சைக்காக சென்றான். கடந்த ஒரு வாரமாக  சிகிச்சை பெற்றவர், திடீரென இறந்ததாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனது மகன் தற்கொலை செய்துகொள்ள  வாய்ப்பே இல்லை.  அவரை கொலைசெய்து உள்ளனர் , இதற்கு காரணமானவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *