திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருச்சி லால்குடி சாலையில் இன்று காலை 8 மணிக்கு மேல் சிமெண்ட் ஏற்றி வந்த பல்கர் லாரி சென்னைக்கு செல்வதற்கு பதிலாக பாதை மாறிய பயணத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு – பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்பவர்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி
திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து சிமெண்ட் ஏற்றுக்கொண்டு பல்கர் லாரி ஒன்று சென்னைக்கு செல்வதற்காக இன்று காலை சென்றபோது நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு
செல்லாமல், திருச்சி லால்குடி, சாலையில் மாற்றி ஓட்டுநர் லாரியை ஒட்டி சென்றார். சிறிது தூரத்திலேயே மாந்தோப்பு பகுதியில் சென்றபோது தவறான பாதையில் வந்ததை அறிந்து லாரியை திருப்ப முயன்றார்.அப்போது குறுகிய சாலை என்பதால் திருப்ப முடியாமல் ஓட்டுநர் திணறினார்.
இதனால் திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளி கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் லால்குடி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிப்புக்கு உள்ளாயினர். மேலும் மாநகரிலிருந்து வரும் வாகனங்களும், துறையூர், சேலம் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும் நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானாவில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் காலையில் பள்ளி கல்லூரி பணிக்கு செல்வார்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். தொடர்ந்து போக்குவரத்து போலீசார் லால்குடி சாலையில் திருப்ப முடியாமல் திணறிய லாரியை திருப்புவதற்கு வாகனங்களை பின் செல்ல செய்து ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு சிமெண்ட் ஏற்றி வந்த பல்கர் லாரியை சென்னை சாலைக்கு அனுப்பி வைத்தனர்.