Skip to content
Home » திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

ஓய்வு என்எல்சி  அதிகாரி வீட்டில் நகை பணம் திருட்டு..

திருச்சி ஏர்போர்ட் பகுதி அன்பில் நகர் நக்கீரன் தெருவை சேர்ந்தவர் சந்திரன் சண்முகம் (வயது 64)ஓய்வு பெற்ற என் எல்சி அதிகாரி கடந்த
10 ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விட்டார். இந்நிலையில் மர்ம ஆசாமிகள் வீட்டில் முன்பக்க கிரில் பூட்டு மற்றும் பிரதான கதவை உடைத்து உள்ளே சென்று புகுந்து அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க செயின் ,நெக்லஸ், நாணயம், ஜிமிக்கி உள்ளிட்ட 19 பவுன் தங்க நகைகளையும்,வெள்ளிப் பொருட்களையும்ரூ 40 ஆயிரம் பணத்தை திருடிச் சென்று உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்திரன் சண்முகம் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மட்டும் கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று சோதனை செய்தனர்.இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ பல லட்சம் மதிப்புள்ள நகை, வெள்ளிப் பொருட்கள், பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு..

இதே போன்று திருச்சி கே கே நகர் ஐயப்பன் நகர் பாரதி தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் ( 66)இவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். கடந்த 12 ந்தேதி லட்சுமணன் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் வசிக்கும் மகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மர்ம ஆசாமிகள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அறையின் கதவு மற்றும் பீரோவை உடைத்து அதிலிருந்த 2 பவுன் நகை மற்றும் 150 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டிற்கு திரும்பிய லட்சுமணன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலை விசி தேடி வருகின்றனர்.