திருச்சி என் ஐ டி கல்லூரியில் உற்பத்தி பொறியியல் துறை சார்பில் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நடைபெற்றது . தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளியில் ஒரு வார கால ஆசிரிய மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க விழா உற்பத்தி பொறியியல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது. துவக்க விழா நிர்வாகத் துறை கட்டிடத்தின் A2 ஹாலில் 18-12-2023 அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற உற்பத்தி பொறியியல் துறை
முனைவர் சி.சத்தியநாராயணன் வரவேற்புரை அளித்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி என்ஐடியின் இயக்குநர் டாக்டர் ஜி.அகிலா 3டி பிரிண்டிங்கில் புதிய தொழில்நுட்பங்களை உணர தொழில்நுட்பவியலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் நமது சமூகத்திற்கு
நேரடியாகப் பயன் தரக்கூடிய தொழில்நுட்பங்கள். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் இயந்திர கற்றல் முதலியன உற்பத்தி பொறியியல் துறையின் கதவுகளை விரிவுபடுத்தியுள்ளது என்றும் கூறினார்.
ஹைதராபாத் டி.ஆர்.டி.எல் லின் உற்பத்தித் துறை தொழில்நுட்ப இயக்குநர் ஜான் ரோஜாரியோ ஜெகராஜ் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று பேசினார். அவர் ஏவுகணை வளர்ச்சியில் 3டி பிரிண்டிங்கின் பயன்பாடுகளை. டிஆர்டிஓ ஊக்குவிக்கிறது என்றும் இந்த துறையில் சமீபத்திய முன்னேற்றங்களை அறிந்துகொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதித்தார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஒருங்கிணைப்பாளர், முனைவர் மு. துரைசெல்வம் நன்றி உரையாற்றினார்.