Skip to content

திருச்சி என்.ஐ.டி. 20வது பட்டமளிப்பு விழா…… 3ம் தேதி நடக்கிறது

  • by Authour

திருச்சி என்.ஐ.டி தனது வைர விழாவினைக் கொண்டாடும் இந்த ஆண்டில், 20வது பட்டமளிப்பு விழாவை  வரும் 3ம் தேதி(சனிக்கிழமை)   மாலை 3 மணிக்கு  என்ஐடி  கோல்டன் ஜூபிலி மாநாட்டு அரங்கில் நடத்துகிறது.  மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் விதமாக இந்த பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுவின் (சி.எஸ்.ஐ.ஆர்) இயக்குநர் ஜெனரல் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறையின் (டி.எஸ்.ஐ.ஆர்) செயலாளர் டாக்டர் என் கலைசெல்வி  விழாவில்  சிறப்பு விருந்தினராக பங்கேற்று  பட்டமளிப்பு விழா உரையையும் நிகழ்த்தவுள்ளார்.

டி.எஸ்.டி. எம்.என்.ஆர்.இ மற்றும் சி.எஸ்.ஐ.ஆர். ஆகிய நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட பல்வேறு கூடுதல் மானிய மற்றும் ஸ்பான்சர் திட்டங்களை டாக்டர் கலைசெல்வி  வழிநடத்தியுள்ளார். குறிப்பாக, 2012 முதல் 2017 வரை சி.எஸ்.ஐ.ஆர்.சி.இ. சி. ஆர் ஐ மற்றும் பிற ஆறு நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு முக்கிய சி.எஸ்.ஐ.ஆர் திட்டமான “மல்டிஃபன்” திட்டத்திற்கான நோடல் விஞ்ஞானியாக பணியாற்றினார். இத்திட்டம் துறைகள் கண்காணிப்பு குழுவிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது.

20வது பட்டமளிப்பு விழாவில்   திருச்சி என்.ஐ.டி  இயக்குநர் முனைவர் ஜி. அகிலா  2,173 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார். இதில் 53 பி.ஆர்க், 1,054 பி.டெக்., 25 எம்.ஆர்க்., 523 எம்.டெக்.88 எம்.எஸ்சி. 113 எம்.சி.ஏ. 87 எம்.பி.ஏ. 22 எம்.ஏ., 11 எம்.எஸ் (ஆராய்ச்சி மூலம்)

திருச்சி என் ஐ டியில் இதுவரை வழங்கப்பட்ட முனைவர் பட்டங்களின் எண்ணிக்கையில் அதிகபட்சமான 197 முனைவர் பட்டங்கள் அடங்கும். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பி.டெக் படித்த ஸ்னேஹா அன் ரெஜி  மிக உயர்ந்த சி.ஜி.பி.ஏ க்கான புகழ்பெற்ற ஜனாதிபதி பதக்கத்தைப் பெறுவார். நிறுவனப் பதக்கங்கள் பி.டெக்., 1 பி.ஆர்க்., 23 எம்.டெக்., + எம்.எஸ்.சி. | எம்.ஆர்க்., எம்.சி.ஏ. 1 எம்.பி.ஏ மற்றும் | எம். ஏ பட்டதாரிகளுக்கு வழங்கப்படும்

என்.ஐ.டி-திருச்சியில் இருந்து பட்டம் பெறுவது ஒவ்வொரு என்.ஐ.டி.மாணவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம். இக்கல்விநிறுவனம் என்.ஐ.டிகளுக்கு இடையே தனது முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. மேலும்என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையில் தேசிய அளவில் பொறியியலில் 9 வது இடம்,மொத்தத்தில் 21 வது இடம், கட்டிடக்கலை துறையில் 4 வது இடம்.மேலாண்மையில் 35 வது இடம் மற்றும் ஆராய்ச்சியில் 22வது இடத்தைப்பெற்றுள்ளது.

2023-24ம் ஆண்டு உலகளாவிய அரசியல் பதட்டங்கள். பொருளாதார வீழ்ச்சிமற்றும் ஐரோப்பாவில் நிலவும் மந்தநிலை காரணமாகக் கல்லூரிவேலைவாய்ப்புக்குக் குறிப்பிடத்தக்கச் சவால்களை ஏற்படுத்தியது. இந்த

சிரமமான சூழ்நிலைகளுக்கிடையிலும், நம்  திருச்சி என்ஐடி நிறுவனம் வெவ்வேறு தொழில்துறைகளில் அதன் விரிவான அணுகுமுறையின் மூலம் 1,450 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வெற்றிகரமாகப் பெற்றுள்ளது. இதன் விளைவாக, 275 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கல்லூரி வேலைவாய்ப்பு செயல்பாட்டில் பங்கேற்றன. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு விகிதம் தற்போது 91.3% ஆக உள்ளது, மேலும் கூடுதல் வாய்ப்புகளைப் பெறுவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. குறிப்பாக, 40 மாணவர்கள் இந்த வேலைவாய்ப்புகள் மூலம் கற்பித்தல் என்ற உன்னத தொழிலை மேற்கொள்கின்றனர். இந்த தகவலை என்ஐடி இயக்குநர் அகிலா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!