ஜப்பானின் முதன்மை தலைமை துணை தூதர் டகா மசயுகி பங்கேற்க உள்ளார்.
திருச்சி துவாக்குடியில் மத்திய கல்வி நிறுவனமான என்.ஐ.டி யில் மாணவர்களால் நடத்தப்படும் கலை இலக்கிய கலாச்சார விழாவான பெஸ்டம்பர் திருவிழா அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக என் ஐடி கல்லூரி வளாகத்தில் அதன் இயக்குனர் அகிலா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நிகழ்ச்சி பற்றி கூறுகையில், திருச்சி என் ஐ டி கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் இந்த ஆண்டுக்கான பெஸ்டம்பர் விழாவானது அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு “கியாட்டோ க்ரோனிகல்ஸ்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஜப்பானிய கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நான்கு நாட்கள் நடைபெறக்கூடிய கலை, கலாச்சாரம், மொழி இலக்கிய கருத்தரங்குகளில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்த உள்ளனர். இதில் 80 க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
அதே போல் ஹிப் ஹாப் தமிழா, மதுஸ்ரீ, உள்ளிட்ட திரை பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் ஜப்பானின் தலைமை துணை தூதர் டகா மசயுகி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
அதே போல் மத்திய தகவல் தொடர்பு துறையின் பங்களிப்புடன் மாணவர்களுக்கு போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றார்.