திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்ப கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழா நாளை ஃபாரன் அரங்கத்தில் நடைபெறுகிறது. மேலும் தேசிய துண்டு கழகத்தில் முன்பே ஆண்டை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் 2155 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாஷ் பன்னாட்டு குழுமத்தின் தலைவரும், முந்தைய நிர்வாக இயக்குனருமான
சோமித்ரா பட்டாச்சாரியா
பங்கேற்க உள்ளார். நிகழ்வில் தேசிய தொழில் நுட்ப கழகத்தின் இயக்குனர் அகிலா 2155 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். அதில் 1090 மாணவர்கள் தொழில்நுட்பத்திலும், 44 மாணவர்கள் கட்டிடக்கலை பட்டம் பெறுகின்றனர் மேலும் முதுகலை மாணவர்கள் 538 பேர் தொழில்நுட்பத்திலும், 22 பேர் கட்டிடக்கலைகளும் 89 பேர் அறிவியலிலும் 108 பேர் கணிப்பொறி பயன்பாடுகளிலும் 19பேர் கலையிலும் 92 பேர் வணிக மேலாண்மையிலும் 19பேர் அறிவியல் ஆய்வுகளும் பட்டம் பெறுகின்றனர் மேலும் 142 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகின்றனர். முதன்மை மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஜனாபதியின் சிறப்பு பதக்கத்தை மின் பொறியியல் மின்னணுவியல் துறையில் சௌந்தர்யா என்ற மாணவி பெறுகிறார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக திருச்சி தேசிய தொழில் கழகம் தரவரிசை கட்டமைப்பில் நாட்டின் முதன்மை தேசிய தொழில் நுட்ப கழகமாக விருந்து வருகிறது. தேசிய அளவில் 2023ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் பொறியலில் 1ம்இடத்திலும், கட்டிடக்கலையில் 4வது இடத்தையும் மேலாண்மையில் 35 வது இடத்தையும் பெற்றுள்ளது என தெரிவித்தார்.
பேட்டின் போது கல்லூரியில் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.