திருச்சி மாவட்டம் திருவரம்பூரை அடுத்த துவாக்குடியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் (என் ஐ டி ) வருடாந்திர தொழில்நுட்ப நிர்வாக விழா தற்போது மாணவர்களால் நடத்தப்படும் பிரக்யான் விழாவாக நடைபெற்று வருகிறது.
என்ஐடி மாணவர்கள் 500 பேர் கொண்ட 17 குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த பிரக்யான் விழா நடைபெறுவதாகவும்
மேலும் இந்த விழாவில் சைபர் கிரைம் கேம் புகுத்தப்படுவதாகவும் இது உலக அளவில் இது பெரும் பங்கு வைக்கும் அளவில் செய்யப்படுவதாகவும் மாணவர்கள் டெக்னாலஜி மட்டுமல்லாமல் இசை, டான்ஸ் அனைத்தும் இடம்பெறுகிறது இந்த விழாவில் 40 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவ மாணவிகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் கலந்து கொள்கின்றனர் இந்த பிரக்கியான் விழாவின் மூலம் சொல்லப்படும் செய்தி உலக நாடுகள் பின்பற்றுவதற்கு தேவைப்படுவதாகவும் அதை நாம் எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் மாணவர்கள் ஒரு கம்பெனியை தொடங்குவதற்கு இது அடித்தளமாக அமையும் மாணவர்கள் வகுப்பறையில் கற்கும் கல்வியை மட்டும் அல்லாமல் வெளியில் உள்ளவற்றை பார்த்து தெரிந்து கொள்ளவும்
பிரெக்யான் என் ஐ டி மட்டுமல்லாது மற்ற மாணவர்களின் அனுபவங்களையும் தெரிந்து கொள்வதோடு மியூசிக், டான்ஸ் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது
இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் என்எல்சி இயக்குனர் சுரேஷ் சந்திரா சுமன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் இந்த விழா 23 இன்று தொடங்கி 26 வரை நடைபெறுகிறது
26 ஆம் தேதி நடைபெறும் கண்காட்சி திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கிவைக்க உள்ளார்
மேலும் இந்த கல்லூரியில் நடைபெறும் விழாவில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
மேலும் கொரோனா காலகட்டத்தில் இந்த விழா நடைபெறுவதால்
மருத்துவ வல்லுனர்கள் தனி மனித இடைவெளி, முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்டை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும் அதன்படி பின்பற்றப்படும்
இந்த பிரக்யான் நிகழ்சியில் மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களை ஊக்குவிக்க பிரக்யான் சங்கம் மற்றும் இன்ஜீனியம் இணைந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது இதில் மாணவர்களின் புதுமையான சிந்தனைகள், படைப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் தலமாக இப்போட்டிகள் அமையும் போட்டியில் என்ஐடி மாணவர்கள் மற்றும் பிற மாணவர்கள்ளும் பங்கு கொள்ளும் விதமாக அமையும்
மேலும் இந்த விழாவில் மருத்துவ நலன், சுற்றுச்சூழல், விண்வெளி தொழில்நுட்பம் ஆகிய தலைப்புகளில் மாணவர்களின் பிரமிக்க வைக்கும் படைப்புகள் இடம்பெறும்.